தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தோ-திபெத் எல்லை படையினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது
தூத்துக்குடி ஜூலை 11
இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை சார்பாக, தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் பயிற்சி பெற்று, ராணுவப் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை சார்பாக தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில், பாதுகாப்புப் படை காவல் கண்காணிப்பாளர் கமாண்டன்ட் சந்தன் மிஸ்ரா தலைமையில் துணை கமாண்டன்ட் ஜெய பிரகாஷ் மற்றும் படை வீரர்கள் என 25 பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர் வருகின்றனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ராமேசுவரம் சிறப்பு வட்டாட்சியர் அப்துல் ஜாபர் மற்றும் சரக கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த சைக்கிள் பேரணியானது ராமநாதபுரம், சாயல்குடி, தூத்துக்குடி, உவரி வழியாக தினசரி 73 கி.மீ. தொலைவு என மொத்தம் 163 கி.மீ. பயணித்து வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி சென்றடைய உள்ளது. இந்த சைக்கிள் பேரணியின் நோக்கம் என்னவென்றால் (CRPF, BSF, CISF, ITBP, SSB மற்றும் ASSAM RIPILE) இந்தப் படையில் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்ய ஊக்குவிப்பது, கடலோர பகுதி இளைஞர்கள், உள்ளூர் மக்களுக்கு ஊக்குவிப்பது, உடற்பயிற்சி செயல் விளக்கங்கள், போதை பொருள்களுக்கு எதிராகவும் பிரச்சாரங்கள், தூய்மை விழிப்புணர்வு மற்றும்.
மக்கள் தொடர்பு அமர்வுகள் நடத்துவது ஆகும் இந்த சைக்கிள் பேரணியானது 10-07-25 மாலை 4 மணியளவில் தூத்துக்குடி தூ.சவேரியார்புரம் வந்தடைந்தனர். அவர்களை முன்னாள் மத்திய துணை இராணுவத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். அதன்பின் தூ.சவேரியார்புரம் கலை அரங்கத்தில் வைத்து மாவட்டச் செயளளர் பிரான்சிஸ் பொன்னாடை போர்த்தி கெளரவப்படுத்தினர்.
இதில் மோகன், கருப்பசாமி, தங்கப்பாண்டி, ஞானப்பிரகாசம், லட்சுமணபெருமாள், மாரிமுத்து, வேதமுத்து, முருகன், ஆசியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி கொடுத்து உபசரிக்கப்பட்டு சைக்கிள் பேரணி வீரர்களுக்கு நினைவு பிரிசு வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தியாளர் ஜேம்ஸ் ரவி

Comments
Post a Comment