Skip to main content

உலகத் திருக்குறள் சமுதாய மையத்தின் சார்பில் உலக சாதனை மாநாடு

கும்மிடிப்பூண்டி,ஜூலை.7: 

உலக திருக்குறள் சமுதாய மையம் மற்றும் டி.ஜெ. எஸ் கல்வி குழுமம் இணைந்து கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் கல்வி குழும அரங்கில் முப்பெரும் உலக சாதனை மாநாட்டினை நடத்தினர்.


டிஜெஎஸ் கல்வி குழும அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு டிஜெஎஸ் கல்வி குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ-வுமான டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்விற்கு டிஜெஎஸ் கல்வி குழும செயலாளர் டி.ஜெ. ஆறுமுகம், துணைத் தலைவர் டி.ஜெ. தேசமுத்து, இயக்குனர் டி.ஜெ.எஸ் தமிழரசன் நிர்வாக அலுவலர் ஏழுமலை, டிஜெஎஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் பிரகாஷ்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் லட்சுமிபதி,  டிஜெஎஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஞானபிரகாசம், டிஜெஎஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் கஸ்பார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் உலக திருக்குறள் சமுதாய மையத்தின் நிறுவனர் முனைவர்  ம.சக்கரவர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வை ஒட்டி 60 மாணவர்களின் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தொல்காப்பியர் திருவுருவ படம், திருவள்ளுவர் திருவுருவப்படம், கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவ படம் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து 1330 திருக்குறள் அடங்கிய பதாகைகளும் திறந்து வைக்கப்பட்டது. இதன் பின் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருக்குறள் மாநில நூல் பகுதி-1, திருக்குறள் மாநில நூல் பகுதி-2, திருக்குறள் கவிதைகள் ஆகிய மூன்று புத்தகங்களையும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஓளவை அருள் நடராஜன் வெளியிட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டார்.

இந்த நூல்களுக்கான தொகுப்புரையை உலக திருக்குறள் சமுதாய மைய தலைவர் கவி மாமணி குமரி செழியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தொல்காப்பியம் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. பின் திருக்குறள் மாநில நூல் குறித்த கருத்த ரங்கும் நடைபெற்றது.


தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜனுக்கு திருக்குறள் கல்வி கொடையாளர் என்ற விருதும், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ஔவை அருள் நடராஜனுக்கு திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர் என்கின்ற விருதும், தமிழ் வளர்ச்சித் துறையை சார்ந்த கு.பிரதாப்பிற்கு திருக்குறள் நெறி பரப்பும் மாமணி என்கின்ற விருது உலக திருக்குறள் சமுதாய மையத்தால் வழங்கப்பட்டது.   

இந்த மாநாடானது புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்திந்திய உலக சாதனை நிறுவனத்தாலும், பெங்களூரை சேர்ந்த யுனைட்டி யுனிவர்ஸ் உலக சாதனை நிறுவனத்தாலும்,  செவெ உலக சாதனை நிறுவனத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது.  இதற்கான சான்றிதழ்களை உலக சாதனை கண்காணிப்பு குழு நிர்வாகிகள் வெங்கடேசன்,  சியாமளா சந்திப் ஆகியோரால் உலக திருக்குறள் சமுதாய மையத்திற்கும், டிஜெஎஸ் கல்வி குழுமத்திற்கும் வழங்கப்பட்டது.

விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பேசுகையில் தமிழுக்கும் திருக்குறளுக்கும் தனிப் பெருமையையும் தனி கவனத்தையும் திமுக அரசு தொடர்ந்து செய்து வருகின்றது என்றவர், திருக்குறள் முற்றொரு மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு தொகை, சென்னை மயிலாப்பூரில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை, திருவள்ளூர் சிலைக்கு செல்ல தனிப்பாதையை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது என்றார். 

தொடர்ந்து பேசிய தமிழக தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் நடராஜன்,  கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலையினடியில் உலக திருக்குறள் சமுதாய மையத்தை சார்ந்த 265 மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் நிகழ்வை நடத்தி தமிழுக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்த்தனர் என்றவர், திருக்குறளை வாழ்வியலில் கடைபிடிப்பவர்களுக்கு வாழ்க்கை என்றும் ஏற்றத்தை மட்டுமே தரும் என்றும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் தமிழகமெங்கும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருக்குறள் வாரம் என்கின்ற நிகழ்வை கொண்டாட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியவர் இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பேச்சுப்போட்டி கவிதைப் போட்டி இசைப்போட்டி ஆகியவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த விழாவில் உலக திருக்குறள் ஆய்வு அறிஞர் மையத் தலைவர் செ.மாதன், உலக திருக்குறள் மாநில மைய தலைவர் பாப்பாத்தி சுப்பிரமணியம், உலக திருக்குறள் மைய துணைத் தலைவர் ஆ.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் பிரான்சிஸ்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...