பூந்தமல்லியில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை. அமைச்சர் நாசர், கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு
தமிழ்நாட்டு மக்களை அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைக்கும் ஒப்புயர்விலா செயல் திட்டத்தின் கீழ் நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்காளரையும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என்று பிரசார இயக்கத்தில் இணைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பூந்தமல்லி நகர திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி பூந்தமல்லி நகரம் 7ஆவது வார்டில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பூந்தமல்லி நகர திமுக செயலாளர ஜி.ஆர்.திருமலை தலைமை தாங்கினார்.
பூந்தமல்லி நகர் மன்ற மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர திமுக நிர்வாகிகள் எச். தாஜூதீன், துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டெல்லி ராணி மலர்மண்ணன், அசோக் குமார், லயன் சுதாகர், புண்ணியகோட்டி, வின்பிரட், நெல்சன், அன்பழகன், சௌந்தரராஜன், யுவராஜ், ஐயப்பன் , பாபு, ராஷிக், நகர் மன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
மேலும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்கள், வியாபாரிகளிடம் திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்களையும், பயன்களையும் பல்வேறு துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் எடுத்துக் கூறினர்.
அரசின் திட்டங்கள் கிடைக்க பெறாமல் உள்ளதா என்பது குறித்த குறைகளையும் கேட்டு, குறை இருப்பின் அதை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 2026ல் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க தாங்கள் வாக்களிப்பதாக உறுதி அளித்து, திமுகவின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினராக சேர்த்தனர்.
செய்தியாளர் வினோத் குமார்


Comments
Post a Comment