பேரூராட்சி வாசல் முன்பு கொளுத்தும் வெயிலில் விவசாயிகள்..!! காணாமல் போன பேரூராட்சி செயல் அலுவலர்..!! நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்..?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது புதுவயல் பேரூராட்சி, இந்த பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக எழுந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அலுவலகத்தில் உள்ளிருந்த தலைவர், மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் , குறிப்பிட்ட நபர்களை உள்ளே அழைத்து பேசிய நிலையில், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை வெளியே செல்ல வலியுறுத்தினர், இதில் காவல்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் அண்ணாதுரை

Comments
Post a Comment