திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானுர் பகுதியில் அரசு சார்பில் குடியிருப்பு வீடுகளை அகற்றி சிப்காட் தொழில் நிறுவனம் கொண்டுவர முயற்சித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்களுடன் இணைந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி மக்களுக்காக போராடி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்து அப்பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்களின் நிலங்களை மீட்டு தந்ததற்காக கிராம மக்கள் ஒன்றிணைந்து முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் வி.மூர்த்திக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாராட்டினர். பின்னர் கிராம மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் வெள்ளனூர் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment