தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபையின் பேராயராக அருள் பெருந்திரு திமோத்தி ரவீந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார்
தூத்துக்குடியில் தூத்துக்குடிநாசரேத் திருமண்டலத்தின் பேராயர் பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயர் மற்றும் உதவி பிரதமபேராயரின் 05.07.2025 தேதியிட்ட ஆணையின்படி தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் பேராயர் மற்றும் பிரதமர் பேராயரின் ஆணையாளராக கோயம்புத்தூர் திருமண்டல பேராயர் அருள் பெருந்திரு திமோத்தி ரவீந்தர் அவா்கள் 07.07.2025 அன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்கள், திருச்சபை மக்கள் குருவானவர்கள் திருமண்டல அலுவலக பணியாளர்கள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் சினாடு பெருமன்ற உறுப்பினர்கள் இந்த பிரதம பேராயரின் ஆணையாளர் பொறுப்பேற்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாழ்த்து கூறினார்கள் பிரதம பேராயரின் ஆணையாளர் திமோத்தி ரவீந்தர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கடந்த நாட்களில் கடினமான சூழல்கள் நம்மை நடத்தின கடவுள் இந்த புதிய எனது பணி காலத்தை ஆசீர்வாதம் மாக்கி தருவார் என்ற நம்பிக்கையோடு இணைந்து பணியாற்றுவோம் வாருங்கள் என்று உரையாற்றினார்கள் தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதமர் பேரரயரோடு ஆலோசித்த பின்பு புதிய தேர்தல் கால ஒழுங்குகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
செய்தியாளர் ரவி

Comments
Post a Comment