Skip to main content

போதை ஒழிப்பிற்காக எஸ்கேசி அறக்கட்டளை மற்றும் ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை சார்பில் மாரரத்தான் போட்டி

போதை ஒழிப்பிற்காக எஸ்கேசி அறக்கட்டளை மற்றும் ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை சார்பில் மாரரத்தான் போட்டி


போதை பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரானநாளை முன்னிட்டு ஸ்ரீ குமரன் அறக்கட்டளை சார்பில் "போதை இல்லாத எதிர்காலம்" என்ற பெயரில் விழிப்புணர்வு  மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி செங்குன்றம் தண்டல் கழனி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை ரெட்டேரி, கொளத்தூர், செங்குன்றம், மாதவரம், புழல், பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 10 முதல்13 வயது வரை, 14 முதல்20 வயது வரை, 21 முதல்40 வயது வரை மற்றும் 41க்கு மேற்பட்ட வயது என  நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தி ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அம்மன் டிஆர்ஓய், ஷெல்டர் ஹோம், சக்ரா ஸ்கேன், ரோட்டரி கொரட்டூர் மற்றும் இதர அமைப்புகளின் ஒத்துழைப்பால் இந்த மராத்தான் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது

இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி கௌசிக், இந்திய மருத்துவ சங்கத்தின் செங்குன்றம் கிளைத் தலைவர் டாக்டர். கோபால் துரைசாமி,  காமராஜர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் தங்கமுத்து, சென்னை வாழ் நாடார் சங்கத் துணைத்தலைவர் ரவீந்திரநாதன், ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் நிர்வாக அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் சி. ஆச்சா ஆறுமுகசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும், நினைவு பரிசையும் வழங்கி கௌரவித்தனர். 

டாக்டர் சி. ஆச்சா ஆறுமுகசாமி கூறும்போது, "இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் சமூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்களாக வளர்வதே எங்கள் நோக்கம். போதை இல்லாத  எதிர்காலம் என்பது மிகவும் சக்திவாய்ந்தது

மேலும் இந்நிகழ்வு மூலமாக போதை  தடுப்பு வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களும் இளைஞர்களும் சமூக மாற்றத் தூதுவர்களாக உருவாக ஊக்கமளிக்கப்பட்டதுடன், போதை இல்லாத தலைமுறையை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும் என அறக்கட்டளை சார்பாக  தெரிவிக்கப்பட்டது.

இதில் மாணவர்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ரஞ்சித்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...