சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சி நியூஸ் ஸ்டார் சிட்டி அனெக்ஸ் பகுதியில் குடியிறுப்புவாசிகள் புதிதாக ஸ்ரீ வியாச வசந்த்த சாய் ஆலயத்தை கட்டி உள்ளனர்.
இதன் கும்பாபிஷே விழா முன்னாள் புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் அவர்களின் தலைமையில் விமர்சையாக துவங்கியது.முன்னதாக விளங்காடு பாக்கம் ஆலயத்திலிருந்து மேளதளங்களுடன் சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
பின்னர் குடியிருப்பு வாசிகளின் ஆரத்தி பூஜை செய்து வரிசைத்தட்டுக்களுடன் சுவாமி சிலையானது ஊர்வலமாக புதிய ஆலயம் வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து யாகசாலையில் முதல் கால பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதில் விளங்காடு பக்கம் ஊராட்சி நியூ ஸ்டார் சிட்டி அனெக்ஸ் 7 மற்றும் 12ஐ சேர்ந்த குடியிருப்புவாசிகள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment