தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ஹெச்எம்எஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் சுசீ ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாவட்டத் துணைச் செயலாளர் காசி, எல்பிஎப் மாவட்டச் கவுன்சில் தலைவர் வீ.முருகன், கருப்பசாமி, ராமசாமி, ஹெச்எம்எஸ் மாவட்டச் தலைவர் ராஜ்குமார், ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளர் பி.ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.பாலகிருஷ்ணன், நகர தலைவர் எஸ்.சுரேஷ்குமார்,
ஹெச்எம்எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் ராஜலக்ஷ்மி ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் பெஷ்சி, செந்தில், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் மின்னல் அம்சத், மாவட்டச் செயலாளர் சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம், ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் ஏ.பாலசிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் றி.சுப்பிரமணியன், பி.ஞானசேகரன் யுடியுசி மாவட்டச் தலைவர் எஸ்.சரவணன், மாவட்டச் செயலாளர் என்.டி.எஸ் அலெக்சாண்டர் மாநகராட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி முத்துமாரி சிஐடியு பொன்ராஜ் அப்பாதுரை சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 265பேரை மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
செய்தியாளர் ரவி

Comments
Post a Comment