கும்மிடிப்பூண்டி,ஜூலை.10. மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கையும், மக்கள் விரோத போக்கையும் கடைபிடிப்பதாக கூறி பல்வேறு தொழிற்சங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டியில் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 பேர் காவல் துறையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்தல், முறை சாரா மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 26ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட 13அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை செயல்படுத்திய நிலையில் கும்மிடிப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தொழிற் சங்க மையத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.அருள் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் கண்டனஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி அர்ச்சுனன், எல்பிஎப் நிர்வாகி சிவக்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.ஏ.பிரேம்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுகுமார், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி சுல்தான் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் எம்.சம்பத், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி மாவட்ட செயலாளர் கே.எம்.விகேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.நீலமேகம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா, மதிமுக மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால் பங்கேற்று கண்டன உரையாற்றி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட இந்தய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர், எல்ஐசி முகவர்கள் சங்கத்தினருடன் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் அவர்களை கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீஸார்
சாலை மறியலில் ஈடுபட்ட 161 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் பிரான்சிஸ்


Comments
Post a Comment