தூத்துக்குடி காந்திநகரில் திருத்தூதர் தோமையார் ஆலய 10 ஆம் திருவிழா நிகழ்வாக சப்பர பவனி நடைபெற்றது
இயேசு பிரானின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தொலைதூரம் பயணமாக இந்தியாவந்தடைந்து கேரளா தமிழ்நாடு மாநிலங்களில இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்தார்.இவரது நினைவாக தூத்துக்குடி காந்திநகர். பகுதியில் கட்டப்படடுள்ள தோமையார் பங்கு கோயிலில் ஆண்டுத்திருவிழா 10 ஆம் திருவிழா இன்று இறைமக்களால் கொண்டாடப்பட்டது . மாலையில் மின்அலங்கார சப்பரம் பவனி ஜியார்ஜ் ரோடு வழியாக அநதோணியார்கோயில், மார்க்கட் வீதிகள், மற்றும் புல்தோட்டம் ,டெலிபோன்காலனி ,தாமஸ்நகர் தெருக்கள் வழியாக மீண்டும் ஆலயம் வந்து சேர்ந்தது திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் பக்தசபையினர் அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பங்கு பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
செய்தியாளர் ரவி

Comments
Post a Comment