Skip to main content

மக்களுடன் முதல்வர் திட்டம் – மூன்றாம் கட்ட முகாமை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள்  பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் நடத்தப்படும் மூன்றாம் கட்ட முகாம் 04.06.2025 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (02.06.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய சிறப்பு திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. மேலும், ஊரகப்பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். அதனடிப்படைடில் மூன்றாம் தட்ட முகாம்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட டி.களத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள ரோவர் மேல்நிலைப் பள்ளியிலும், எசனை அம்பேத்கர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 04.06.2025 அன்று நடைபெறுகிறது.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அணுகும் துறைகளான வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட  தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மனுக்கள் பதிவது, மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். மனுக்கள் அனைத்தும் இணையதள வாயிலாக பதிவு செய்யப்படுவதால், இணையதள வசதியும், மின்சார வசதியும் தடையின்றி வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாம்  தொடர்பான தகவல்களை தொடர்புடைய வட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளம்பர பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் அதிகமாக முகாம்களில் பங்கேற்பதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், பொதுமக்கள் அமருவதற்கான போதிய இருக்கை வசதிகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஏற்படுத்திட வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறு கண்காட்சி அரங்குகளை அரசின் முக்கியமான துறைகள் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். முகாமில் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அதிகமாக வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

இதுபோன்ற முகாம்கள் நடத்துவதின் முக்கிய நோக்கமே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அவர்களை தேடிச் சென்று அவர்களுடைய இடத்திலேயே தீர்வு காண்பதற்காக நடத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இத்திட்டத்தினை அனைத்து அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சுந்தரராமன், சமூக நல அலுவலர் திருமதி புவனேஸ்வரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ரெ.சுரேஷ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வி.வாசுதேவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரபு ஜெயக்குமார் மோசஸ், தாட்கோ மேலாளர் திரு.கவியரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், வட்டாட்சியர்கள் திரு.பாலசுப்ரமணியன் (பெரம்பலூர்), திரு.முத்துக்குமார் (ஆலத்தூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் ஜஹாங்கீர்


Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...