Skip to main content

கலைஞரின் 102 வது பிறந்த நாளை வெகுவிமர்சியாக கொண்டாடிய திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுகவினர்

கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் ஜோதி நகர் கிளைக் கழக செயலாளரும் , தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கேஏடி .அன்பு ஏற்பாட்டில் கலைஞரின் 102 வது பிறந்த நாளையொட்டி கழகக் கொடியேற்றி கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெகு விமர்சியாக கொண்டாடிய கட்சியினர்கள் !

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கோவளம் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள ஜோதி நகர் பகுதியில் இன்று காலை 10.00 மணி அளவில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகம் கேளம்பாக்கம் ஊராட்சி கிளைக் கழகம் சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜோதி நகர் கிளைக் கழகச் செயலாளரும், தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கே. ஏ .டி அன்பு தலைமை தாங்கினார் .

கேளம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் ராஜா மோசஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள்.கட்சியினர்களானமோகன் ,கனகராஜ், நடராஜ் வேணுகோபால் ஆகியோர்கள் அனைவரையும் வரவேற்றனர்கள். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பு குழு உறுப்பினர்ரும் , முன்னாள் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளருமான கேளம்பாக்கம் கே. வாசுதேவன், கிளைக் கழகச் செயலாளரும், முன்னாள் கேளம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் தி.கா.பாளையம் ஆகியோர்கள் கலந்துகொண்டு முதலாவதாக கட்சியின் கல்வெட்டில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பின்னர் மேடையின் மீது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து ரோஜா மலர் தூவி வணங்கி , கலைஞரின் வாழ்வியல் குறித்து சிறப்புரையாற்றினார்கள் .

இதனைத் தொடர்ந்து கிளைகழகச் செயலாளரும், தொழிலதிபரும் மக்கள் சேவகருமான கே .ஏ. டி .அன்பு மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மூவரும் இணைந்து பொதுமக்கள் கட்சியினர்களுக்கு கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை லட்டு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் கட்சியினை சேர்ந்த ராஜ்குமார், விஜயகுமார், ஷியாம், சர்மா,நாதன் ,சுமன் ,மருதுபாண்டி, அஸ்கர் அலிபாய் பொன்னுரங்கம்,பாபு ,முத்து, பாலு, சரவணன் ,பா. நிஷாந்தன் வினித் ,விக்கி, தென்னரசு, தட்சிணாமூர்த்தி, அருளானந்தம், ஏழுமலை ,ஐயப்பன் மகளிர் அணியினைச்சேர்ந்த லதா ,விஜய் ,சங்கீதா, சோபா ,மேரி, சைதாபாணு மற்றும் கட்சியினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதி நகர் கிளைக் கழக செயலாளரும், தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கே ஏ டி அன்பு கட்சியினர்களில் ஒருங்கிணைத்து செய்திருந்தார். வந்திருந்து கலந்து கொண்ட அனைவருக்கும் ஜோதி நகர் கிளைக் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் மூர்த்தி

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...