கலைஞர் பிறந்தநாளில் 10 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் 102 கா்ப்பினிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கினார் அமைச்சர் கீதாஜீவன்
கலைஞாின் சாதனைகளையும் வரலாறுகளையும் யாரும் மறைத்துவிட முடியாது 10 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் 102 கா்ப்பினிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி 102வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு உள்ள கருணாநிதி சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாலை அணிவித்து மலர் தூவி மாியாதை செய்து லட்டு வழங்கினார்.
பின்னர் பழைய பேருந்துநிலையம் அருகில் அமைச்சர் கீதாஜீவன் கேக்வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய பின் அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய பின்னா் கலைஞா் அரங்கில் 102 கா்ப்பிணி பெண்களுக்கு 14 வகையான சத்து பெட்டகம் 1 கிலோ போிச்சம்பழம் 1 சேலை எவா்சில்வா் தாம்பலம் ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை பழங்கள் ஊக்கத்தொகை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்
14 வயதில் தமிழ் கொடியேந்தி தமிழக மக்களுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் உழைத்து பொதுவாழ்வில் தேசிய அளவில் மாபெரும் தலைவராக விளங்கிய கலைஞருக்கு தான் 102வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். 1989ல் கலைஞர் ஆட்சியின் போதுதான் கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டசத்து வழங்கி பேறுகால உதவிதொகையாக 500 வழங்கப்பட்டு பின்னா் படிப்படியாக ஓன்றிய அரசின் நிதி மூலம் தமிழக அரசும் சேர்ந்தும் செயல்படுத்திய திட்டம் இன்று இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. கருவூற்ற பெண்களுக்கு 1000 நாட்கள் முக்கியமான நாட்களாகும் அந்த நேரத்தல் சத்தாண காய்கறிவகைகள் பால் முட்டை ஊட்டசத்துக்கள் இருந்தால் தான் நீங்களும் ஆரேக்கியமாகவும் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளும் உங்களின் மூலம் வளரும் ஓரு நாளைக்கு 5 முறை சாப்பிட வேண்டும். அதில் விருப்பமான உணவு களை உட்கொள்ளுங்கள் 6 மாதம் வரை தாய்பால் அவசியம் கொடுக்க வேண்டும் அதன்பின் ஜீரண சக்தியாககூடிய உணவு வகைகளை கொடுத்தால் தான் மூளை வளர்ச்சியுடன் ஆரோக்கியமான உடல் அமையும். 89க்கு முன் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை இல்லாத நிலை உள்ளது கலைஞர் ஆட்சி வந்த பின் தான் பெண்களுக்கு சொத்துாிமை வழங்கப்பட்டு 33 சதவீத இட ஓதுக்கீடு வேலை வாய்ப்பு உள்ளட்சியில் அதிகாரம் வழங்கப்பட்டது அந்த காலக்கட்டத்தில் தான் பெண்களுக்கு பொற்காலம் என்று பேசப்பட்டது. கலைஞர் ஆட்சியில் தான் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது திருவள்ளுவர்க்கு 133 அடி சிலை வைக்கப்பட்டது. கைாிக்ஷா ஓழிக்கப்பட்டு சைக்கிள் ாிக்ஷா திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்படி எல்லா வகையிலும் தமிழ்சமுதாயம் வளர வேண்டும் என்று தமிழ்நாடு முன்னேற்றமடையவேண்டும் என்று பல சாதனைகளை செய்து வாழ்நாளில் தமிழகத்தை செம்மை படுத்திய சிற்பி கலைஞாின் வரலாறை யாரும் மறைக்கவும் மறக்கவும் முடியாது. ஆனால் அவா் வழயில் செய்த சாதனைகளை எல்லாம் பின்பற்றி கூடுதல் சாதனையாக 33 சதவீதம் என்று இருந்ததை 50 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியதின் மூலம் எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. வேலை வாய்ப்பு படிப்பு என்ற அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றமடைந்து எல்லா துறைகளிலும் தமிழக அரசு தான் முன்னோடியாக திகழ்கிறது என்று ஓன்றிய அரசு பாராட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைத்து தரப்பினருக்கும் எல்லா திட்டங்களையும் செயல்படுத்தியது மட்டுமின்றி எடப்பாடி ஆட்சியில் முடங்கி கிடந்த நலவாாியங்கள் தற்போது 13 முறையாக செயல்படுகின்றன. இப்படி தமிழக மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் மருத்துமனை டீன் சிவக்குமாா், உறைவிட மருத்துவா் சைலஸ்ஜெபமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மாவட்ட அணி நிா்வாகிகள் மதியழகன், அபிராமிநாதன், அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, அருணாதேவி, குபோ் இளம்பாிதி, அந்தோணிகண்ணன், அருண்குமாா், பழனி, நிக்கோலாஸ்மணி, ஜேசையா, நாகராஜன், பகுதிசெயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், மீனாட்சி சுந்தரம், சேர்மபாண்டியன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபர் விஜயராஜ்,ஆனந்தசேகா், முருகஇசக்கி, ஜெயக்கனி, சாகுல்ஹமீது, பால்ராஜ், மகேஸ்வரசிங், டினோ, நாராயணவடிவு, ரூபராஜா, ரெக்ஸ், நலம் ராஜேந்திரன், பிரவீன்குமார், வினோத், ரவி, சந்தனமாாி, ெசந்தில்குமாா், சத்யா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், விஜயலட்சுமி, ரெக்ஸின், ஜெயசீலி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், நவநீதன், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, சுரேஷ்குமார், ராஜா ெபாியசாமி, குமாா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் வேல்முருகேசன், சண்முகராஜ், வட்டச்செயலாளர்கள் டென்சிங், மூக்கையா, சுப்பையா, பொன்னுச்சாமி, பொன்ராஜ், பாலகுருசாமி, கதிரேசன், சதீஷ்குமார், செல்வராஜ், பத்மாவதி, முனியசாமி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, மகளிர் அணி ரேவதி, மற்றும் மணி, அல்பர்ட், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும் கலைஞர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது.
மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், நகர துணைச்செயலாளர்கள் அனல் டேவிட்ராஜ், மாாிமுத்து, பொருளாளர் செல்லப்பா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், முருகேசன், உள்பட பலர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
திராவிடா் கழகம் சாா்பில் மாவட்ட தலைவா் முனியசாமி மாைல அணிவித்தாா். வடக்கு மாவட்ட திமுக சாா்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள ஜான்ஜீகன் முதியோா் இல்லத்திற்கு காலை உணவும் பத்திரபதிவு அலுவலகம் அருகில் உள்ள மனித நேயம் முதியோா் இல்லம் ஆறுமுகசாமி அன்பு ஆசிரமம், செவித்திறன், மாற்றுத்திறனாளி பள்ளி நேசக்கரங்கள் சிறுவா் சிறுமியா் ஆதரவற்றோா்இல்லம் பாசக்கரங்கள் முதியோா் இல்லம் பிளசிங் முதியோா் இல்லம் நியூ நேசக்கரங்கள் முதியாோ் இல்லம் சிறுவா் கருணை இல்லம், புனித அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
பாக்ஸ்: பெண்களுக்கு இட ஓதுக்கீடு மூலம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் தான் 96ம் ஆண்டு நான் ஊராட்சி மன்ற உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டு அதன்மூலம் பொதுவாழ்வில் பணியாற்றி வருகிறேன். இது போன்று தான் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ளாட்சியில் அதிகாரம் வழங்குதவற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து ஊக்க ெதாகை வழங்கியது குறித்து கர்ப்பிணி பெண் ஓருவர் கூறுகையில் எங்களுக்கு எங்கள் தாய் தந்தையா்கள் செய்ய வேண்டிய கடமைகளை மனித நேயத்தோடு உடன் பிறந்த சகோதாியாக இருந்து அமைச்சர் கீதாஜீவன் அறிவுரைகள் வழங்கி பல பொருட்களுடன் ஊக்கத்தொகையும் வழங்கியது எங்கள் வாழ்வில் எந்நாளும் மறக்க முடியாத ஓரு பொன்நாளாகும். தொடா்ந்து தங்களது மக்கள் பணி, தொடா்வதற்கு மனதார வாழ்த்துகிறோம். என்று கூறினாா்கள்.
செய்தியாளர் அ ரவி

Comments
Post a Comment