வடபெரும்பாக்கம் சென்னை மாநகராட்சி பள்ளியில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த அருந்ததியருக்கான 3% சதவீத இட ஒதுக்கிட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கும் விதமாக,
மாதவரம் சட்டமன்றத் தொகுதி, 17வது வட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி துவக்கப்பள்ளியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞரின் திருவுருவப்படத்திற்கு, மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம் நாராயணன் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் லட்டு ஆகியவற்றை, மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம். நாராயணன், வட்டச் செயலாளர் கே. கருணாகரன் வட்டக் கழக நிர்வாகிகள் சி பாலாஜி கே. சண்முகப்பிரியன், சி. மூர்த்தி,எஸ். சிவக்குமார்,எம். ஜான்சன் இ. சுதர்சன், பூபாலன் ஆகியோர் வழங்கினார்கள்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment