சோழ தேச ஓய்வு பெற்ற படை வீரர்களால் உருவாக்கப்பட்ட பூங்காவினை பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.!
சோழ தேச ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, பைபாஸில் குப்பை கூலங்களாக இருந்த இடத்தினை சுத்தம் செய்து, சாலை இரு புறங்களிலும், சுமார் ரூ.2.5-லட்சம் மதிப்பிலான, சந்திராயன்3- பூங்கா, வீரத்தாய் பூங்கா, இதனை சோழ தேச ஓய்வுப்பெற்ற படை வீரர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அழகுமிக்க பூங்கா. இந்தப் பூங்காவினை தஞ்சை மாநகராட்சி மேயர், சண். இராமநாதன் பொன் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
சோழ தேச ஓய்வு பெற்ற படை வீரர்களால் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவானது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போதிலும்கூட,இது நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டதாகவே உள்ளது, இந்தப் பூங்காவினை பராமரிக்கக் கூடிய உரிமை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியே சாரும். ஆகவே தஞ்சை மாநகராட்சி மேயர் பொன் கரங்களால் திறக்கப்பட்ட, சோழ தேச ஓய்வு பெற்ற படைவீரர்களால் உருவாக்கப்பட்ட பூங்காவை, நாஞ்சிக்கோட்டை ஊராட்சியோ, அல்லது தஞ்சை மாநகராட்சியோ,வாரத்திற்கு ஒரு முறையாவது, ஒரு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர்விட்டால் இந்தப்பூங்காவானது எப்பொழுதும் பசுமையோடு காட்சியளிக்கும், அது மட்டுமல்லாது பைபாஸில் செல்லக்கூடியவர்கள் இந்தப் பூங்காவினை பார்த்து ஆச்சரியப்படுவார்கள் எனவும், அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், இதனை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கையாக வைத்துள்ளார்கள். ஆகவே இந்தப் பூங்காவினை பாதுகாத்து, பராமரிக்க போவது, நாஞ்சிக்கோட்டை ஊராட்சியா..? அல்லது தஞ்சை மாநகராட்சியா.? பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment