Skip to main content

தூத்துக்குடி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லம், துளசி சோசியல் சர்வீஸ் டிரஸ்ட், தாயகம் அறக்கட்டளை, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை சார்பில் தூத்துக்குடி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல வளாகத்தில் வைத்து இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இம்முகாமிற்கு நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல மேலாண்மை இயக்குனர் ஏ.முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் ஜெயபால், காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) ஹென்சன் பவுல்ராஜ், அய்யடைப்பு முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் ஆ.ஆதிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நியூ பாசக்கரங்கள் நிர்வாக இயக்குனர் எம்.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கண் மருத்துவ முகாமின் நோக்கம் குறித்து துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ்.தனலெட்சுமி பேசினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு இலவச கண் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். நாகர்கோயில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவர் அருண், ஒருங்கிணைப்பாளர் சுந்தர் குழுவினர் மக்களுக்கு கண் பரிசோதனைகளை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, தேவைப்படும் பயணாளிகளுக்கு கண்ணாடிகளை வழங்கினார்கள். தாயகம் அறக்கட்டளை இயக்குனர் வி.ஜெயக்கனி, சிகரம் அறக்கட்டளை இயக்குனர் பி.முருகன், பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை இயக்குனர்கள் தா. முருகேஸ்வரி, ஏ.புஸ்பவேணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக நியூ பாசக்கரங்கள் இயக்குனர் முருகலெட்சும் நன்றி கூறினார். இம்முகாமில் சுடலைகாலனி, ஆட்டோகாலனி, அந்தோனியார்புரம், சத்யாநகர், கருணாநிதிநகர், இராஜபாண்டிநகர் பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செய்தியாளர் அ ரவி

Comments