தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஊராட்சி ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சியில், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை திருவையாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், துரை. சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். தமிழக முழுவதும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தற்போது தொடங்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஊராட்சி ஒன்றியம், இராமாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற வளாக எதிர்புறம் இத்திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருவையாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், துரை. சந்திரசேகரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் வை.ஜெயந்தி மாலாகேசவன், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் அருளானந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பு சித்ரா பிரபாகரன் வரவேற்றார். இராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நரசநாயகபுரம், திருவேதிகுடி, நாகத்தி, ராஜேந்திரன் உமையவள் ஆற்காடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். இதில் ஆறு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட்டன. நடைபெற்ற இந்த நிகழ்வில் தாசில்தார் அருள்ராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன், சுவாமிநாதன்,ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், நரசநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment