அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விலங்கியல்த்துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.!
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விலங்கியல்த்துறை சார்பாக, பூச்சிநச்சியியல் கருத்தரங்கம், 20.8.2024 அன்று காலை 10 மணி அளவில் ஜான் போப் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கடவுள் வாழ்த்து ஒலிக்க, குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியானது துவங்கியது.
இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் விலங்கியல் துறைத்தலைவர் முனைவர்,க.தாஸ் அவர்கள் வரவேற்றார், இந்நிகழ்ச்சிக்கு இக்கல்லூரியின் தாளாளர் அருட்தந்தை. முனைவர், ஜான் சக்ரியாஸ் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். இக்கல்லூரி நிர்வாக அருட்தந்தை ஆரோன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த சிறப்பு வாய்ந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, மன்னர் சரபோஜி அரசு கல்லூரியின் விலங்கியல்த்துறை பேராசிரியர், முனைவர் சுகுமாரன் கலந்து கொண்டு பூச்சு நச்சுயியல் தொடர்பான கருத்துக்களை மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், மாணவ, மாணவியரின் மனதில் நிற்கும் அளவிற்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இவர்,10- முனைவர் பட்ட மாணவர்களை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த, பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர், நிகழ்ச்சியின் இறுதியாக நாட்டுப் பண் ஒலிக்க நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment