Skip to main content

வெள்ளானூர் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சி ஆரிக்கம்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்பு உணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி ஸ்மார்ட் கிளாஸ் துவக்க விழா, சீனிவாச நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழாவும் வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான வெள்ளானூர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோரை மு.தயாளன் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் பசுபதி, ஜெயராம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே போதை விழிப்பு உணர்வு உறுதிமொழி வாசகங்களை வாசிக்க மாணவ-மாணவிகள், பள்ளி ஆசிரிய - ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர்.

வெள்ளானூர் ஊராட்சி சீனிவாச நகரில் புதிய டிரான்ஸ்பார்மரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் துவக்கி வைத்தார். மின்வாரிய செயற்பொறியாளர் சௌந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் சன், உதவி பொறியாளர் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஏ.ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர் குணா தயாநிதி, வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளரும் ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளருமான பொத்தூர் நா.மாரி, கொள்ளுமேடு கிளைச் செயலாளர் புனிதவேல், இளைஞரணி இளமாறன், இளம்பரிதி, வேதா செந்தில், ஸ்டீபன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் வெள்ளானூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை செய்யும் பெண்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

செய்தியாளர் ரஞ்சித் 

Comments