புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், பாரத தூய்மை இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, தரமான சாலை, குடிநீர் வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என்.ஆனந்தி நாகராஜன், ர.தர்மிரவி, ஏ.எல்,மாரி, எஸ்.அருணாதேவி சீனு, என்.மாரியம்மாள் நரசிம்மன், க.சத்தியசீலன், மு.நிலவழகி இனியன், எஸ்.ரதி சீனிவாசன், செயலர் கே.வி. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment