மாதவரம் தணிகாசலம் நகர் மழைநீர் கால்வாய் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நீர்வள ஆதாரத் துறை சார்பில் அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகரில் 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தணிகாசலம் கால்வாய் மொத்தம் 3050 மீட்டர் நீளம் கொண்டது. கடந்த பருவமழையின்போது தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, முதலமைச்சர் 9.11.2021 அன்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 91.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயினை திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தும் பணியினை முதலமைச்சர் 30.08.2023 அன்று தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் தணிகாசலம் நகர் கால்வாயினை அகலப்படுத்தி கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு திறந்தவெளி கால்வாயாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ். சுதர்சனம், தாயகம் கவி, அ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக பகுதி செயலாளர்கள் தி.மு. தனியரசு, ஏ.வி. ஆறுமுகம், மை.வ.அருள்தாசன், புழல் எம்.நாராயணன், ஜி.துக்காராம், மாதவரம் மண்டலக் குழுத் தலைவர் எஸ்.நந்தகோபால், ஒன்றியச் செயலாளர்கள் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், வில்லிவாக்கம் (வடக்கு) மோரை கோ.தயாளன், செங்குன்றம் ஆர்.டி. குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன், புத்தாகரம் ஏழுமலை,ஏ.சந்திரன், காசிநாதன், குணசுந்தரி குட்டிமோகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜி.கே. இனியன், கேபிள் த. கணேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சன்.முனியாண்டி, வட்டச் செயலாளர்கள் எம்.சரவணன், டி.சுந்தரம், துரை ஸ்ரீராமுலு, பொறுப்பாளர் அன்பில் மகேஷ், செங்குன்றம் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment