சோழவரம் ஊராட்சி ஊராட்சி ஒன்றியம் ஆங்காடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மதன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினி, உதவி செயற்பொறியாளர் சங்கீதா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சியில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் விமலா, செல்வி, சங்கர், சுமதி, ஈஸ்வரி, ரஞ்சிதா, வெங்கடேசன், குணசுந்தரி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலர் தனசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார். கிராமம் பொதுமக்கள் மகளிர் குழுக்கள் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment