நம் நாடு சுதந்திரம் பெற்று, 78- ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,78-வது சுதந்திர தினத்தை இந்தியா முழுவதுமாக, ஆகஸ்ட் 15-அன்றுசுதந்திர தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
சுதந்திர திருநாள் அன்று கலைகளின் தலைநகரமாக விளங்கும் தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில், பூங்காவில் பூங்காற்று என புதிய நிகழ்வாக,குரு திருமதி.அருணா சுப்பிரமணியம் அவர்களின், ஶ்ரீ சக்தி நாட்டிய கலாலயம் மாணவிகள் நடத்திய, பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, 15.8.2024 அன்று மாலை,5:00- மணியளவில் நடைபெற்றது. புதிதாக நடைபெறும் இந்நிகழ்ச்சியினை, சிறப்பு விருந்தினர், தஞ்சை மாநகராட்சி மேயர்,சண். இராமநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை ஆடல் வல்லான் நாட்டியாலயா நிறுவனர், திருவையாறு கலைசுடர்மணி குரு, க.வஜ்ரவேல் மற்றும் தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவர், கலை நன்மணி,ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினார்கள். இந்தபரதநாட்டிய நிகழ்ச்சியானது வாரம் தோறும் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகியமூன்று தினங்களும் பரதநாட்டியம்/ கரகம்/ காவடி/ கட்டைக்கால்/ கிராமிய இசை/ வயலின்/ வீணை/பட்டி மன்றம்/ பாட்டு மன்றம் என பல்வேறு பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள், மக்களை மகிழ்விக்கும் வண்ணம் தொடர்ந்து நடைபெறும்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment