Skip to main content

செங்குன்றம் அருகே தமிழ்நாடு டைய்ஸ், கெமிக்கல்ஸ் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம்

செங்குன்றம் அருகே தமிழ்நாடு டைய்ஸ், கெமிக்கல்ஸ் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் 

அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில் ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிடங்குகளில் ரசாயன மூல பொருட்கள் விற்பனையை ஒழுங்குப்படுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. 

இதன் ஒரு பகுதியாக சென்னை செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் ஸ்ரீ வி.என். சர்மா கன்வென்ஷன் சென்டரில் தமிழ்நாடு டைய்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் மகாவீர் போரா தலைமையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் கலந்தாலோசனை நடத்தினார். செயலாளர் கே.நரேஷ், பொருளாளர் கிரண் சந்த், பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் தலைவர் அசோக் ராட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது பேசிய கிடங்கு உரிமையாளர்கள் காவல்துறையை அணுகுவதில் சற்று கடினமாக உள்ளதாகவும், காவல்துறை மக்களின் நண்பன் என்பது போல எளிமைப்படுத்திட வேண்டும் என்றனர். மேலும் பல்வேறு ரசாயன மூலப்பொருட்களை கையாள உரிமம் பெறுவதற்கான வழிகளை அரசு மேலும் எளிமைப்படுத்திட வேண்டும் எனவும், வெவ்வேறு துறைகளுக்கு அலைக்கழிக்கப்படாமல் ஒற்றை சாளர முறையில் உரிமம் வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர். 

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய காவல் ஆணையர் கே.சங்கர் கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து ரசாயன பொருட்கள் சேமிப்பு கிடங்குகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ரசாயன பொருட்களின் விற்பனை தொடர்பாக முறையாக ஆவணங்களை பராமரிக்க வேண்டும், எந்தவிதமான ரசாயன பொருட்களையும் ரசீதின்றி விற்பனை செய்ய கூடாது எனவும் அறிவுறுத்தினார் என்றார். 

இக்கூட்டத்தில் ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் ராஜேந்திரன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் (சென்னை நகரம் வடக்கு) என்.ஆர். சுந்தர், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் கே.எஸ். பாலகிருஷ்ணன்,  மது விலக்கு துறை துணை ஆணையர் அசோகன், செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட், காவல் ஆய்வாளர்கள் புருஷோத்தமன், எம்.ஜி. ரமேஷ், ஷாம் வின்சென்ட், மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் மலர்க்கொடி உள்ளிட்ட அசோசியேஷன் நிர்வாகிகள் உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் ரஞ்சித்

Comments