சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்த உமராபாத் பனங்காட்டூர் பகுதியைச் சார்ந்த ஹரிகரன் அவர்களுக்கு பனங்காட்டூர் மக்கள் உற்சாக வரவேற்பு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உம்ராபாத் பனங்காட்டூர் பகுதியைச் சார்ந்த முருகேசன் மலர் அவர்களின் இளைய மகன் திரு. ஹரிஹரன் MSC, பெங்களூரில் தனியார் மருந்தகத்தில் வேலை செய்கிறார்.
ஹரிகரனின் குருவான சின்ன தம்பி அவர்கள் ஆரம்ப காலத்தில் பயிற்சி கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார் ஹரிகரன் இளம் வயதிலேயே சிலம்பாட்டத்தில் மிகவும் ஆர்வமும் சாதிக்க துடித்தவர். தொடர்ந்து பல்வேறு போட்டியில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்து பிறந்த மண்ணுக்கு பெருமைத் தேடி தந்துள்ளார், இந்த சாதனையை கொண்டாடும் விதமாக அவரது மாமா சரத்குமார் உமா சங்கர், விக்னேஷ், சேதுபதி குடும்பத்தார் அபிநயா, அபிஷேக் மற்றும் பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இளைஞர்களும் ஹரிஹரன் வருகையொட்டி வானவேடிக்கை தாரை தப்பட்டை, மேல தாளத்துடன் பிரமாண்டமான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் அனந்தன்

Comments
Post a Comment