Skip to main content

முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு


அம்பத்தூர் அடுத்தபாடி,  புது குப்பம் பகுதியை சேர்ந்தவர் அழகுமுருகன்(25), ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு தனது நண்பருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த மோகன் தரப்பினர் ஆயுத பூஜைக்கு பணம் கேட்டபோது பணம் தர மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழகு முருகனை மோகன், டேனியல் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததில் அழகு முருகன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த சம்பவத்தில் பிரபல ரவுடிகளான

மோகன்(25), டேனியல்(23), மற்றும் 17 வயது சிறுவர்கள் மூன்று பேர் என மொத்தம் 5 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3 ல் நடந்து வந்தது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மோகன், டேனியல் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும்

மோகனுக்கு ரூ.16 ஆயிரம், டேனியலுக்கு ரூ.11 ஆயிரம் விதித்தும் மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.

ஆயுள் தண்டனை பெற்ற இருவரும் ஏ கேட்டகிரி ரவுடிகள் என்பதும் கைது செய்யப்பட்ட இளம் சிறார்கள் மூன்று பேரில் ஒருவன் கொலை செய்யப்பட்ட நிலையில் மற்ற இரண்டு பேர் மீதும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வினோத்

Comments