அருந்ததியர்களுக்கு மூன்று சதவீதம் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பால், ஆதித்தமிழர் பேரவையினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் .!
அருந்ததியர்களுக்கு முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களாலஅருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட. மூன்று சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி 1.8.24. அன்று மாலை 6:00 மணியளவில் தஞ்சை ரயிலடியில், ஆதித்தமிழர் பேரவையினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மாநில கலை இலக்கிய அணி துணைச். செயலாளர்,எம்.பி. நாத்திகன், ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை மாவட்ட தலைவர்,பி. தானி வேல், ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை மாவட்ட செயலாளர், பி.தியாகராஜன், ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை மாவட்ட பொருளாளர் வள்ளிமுத்து, ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை மாவட்ட துணைத் தலைவர், கே.ஆர்.பி. மணி, ஆதித்தமிழர் பேரவையின் முன்னாள் மாவட்ட செயலாளர், இரா. மாயன், நீலகிரி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் செல்வ சுப்ரமணி, திமுக கரந்தை பகுதி பொறுப்பாளர, பழ. மாவீரன் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் உறுப்பினர்கள்,எம். பாலுசாமி,கே.பாபு, உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment