புழல் கதிர்வேடு புதிய மின்மாற்றி துவக்க விழா மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையேற்று துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 31வது வட்டச் செயலாளர் அன்பின் மகேஷ் அனைவரையும் வரவேற்றார்.
மாதவரம் மண்டல குழு தலைவர் எஸ்.நந்தகோபால், பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு, மின்வாரிய செயற்பொறியாளர் சௌந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் பாலச்சந்திரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 30வது வட்டச் செயலாளர் டி.சுந்தரம், 31வது அ வட்ட நிர்வாகிகள் நாகராஜ், சூசைமுத்து, ரமேஷ், குணபூசணம், மனோகரன், பால கணேசன், காங்கிரஸ் புழல் வட்டாரத் தலைவர் சந்திரசேகர், இளைஞர் அணி உதயா, ஜனா, பிஎஸ்என். தயாளன், மாவட்ட பிரதிநிதி ஆனந்தராஜ் மகளிர் அணி லீலாவதி, மனோன்மணி, சகிலா, உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment