குடும்பத்தினருக்கு மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் நிர்வாகிகள் நேரில் ஆறுதல். 30.7.2024 வயநாடு மாவட்டம், மேப்பாடி சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, குன்னூர் கரன்சி ஐயப்பன் காலனியை சார்ந்த ரவிச்சந்திரன் அவர்களின் மகள் மருமகன் பேரப்பிள்ளை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இவர்களது உடல்கள் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டு, உறவினர்கள் குன்னூர் கரன்சி பகுதிக்கு வருகை தந்தனர்.தகவல் அறிந்தவுடன், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் இவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று நீலகிரி மாவட்ட திமுக சார்பில் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
உடன் குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி, குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார், மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் இரா.அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் பா.மு.வாசிம் ராஜா,பொதுக்குழு உறுப்பினர் எம்.சதக்கத்துல்லா, மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், ஒன்றிய ITWING அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர்கள் கரன்சி முத்து, ஜெய்கணேஷ், கோடமலை மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், பிரவீன், நகர விவசாய அணி அமைப்பாளர் ரவி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
செய்தியாளர் ரவி

Comments
Post a Comment