தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம்,(7.8.2024) இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்டம் மற்றும் மாநகரம் மற்றும் ஒன்றியம், பேரூர் தி.மு.க. சார்பில், மத்திய மாவட்ட செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான, துரை.சந்திரசேகரன் தலைமையில்,தஞ்சை ரயிலடியிலிருந்து ஏராளமான தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு, கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தனர்.
அதன் பின்னர் கருணாநிதியின் உருவ சிலைக்கு, துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்: டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம், தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான, சண். இராமநாதன், மாநில மருத்துவ அணி துணை. செயலாளரும், தஞ்சை மாநகராட்சிதுணை மேயருமான,டாக்டர். திருமதி.அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்டத் துணைச் செயலாளர்கள்: புண்ணியமூர்த்தி , மணிமாறன், கனகவள்ளி,மாவட்ட பொருளாளர் அண்ணா, ஒன்றிய செயலாளர்கள்: அருளானந்தசாமி, செல்வகுமார்,பகுதி செயலாளர்கள்: சதாசிவம், நீலகண்டன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில்வேந்தன், இளைஞரணி துணை அமைப்பாளரும் கவுன்சிலருமான, செந்தமிழ்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள்: மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா , கவுன்சிலர்கள்: உஷா, தமிழ்வாணன், மகளிரணி, தொண்டரணி அமைப்பாளர் கமலாரவி, சுற்றுசூழல் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment