Skip to main content

பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மிகவும் பழமையான, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு 30-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

இதை தொடர்ந்து அம்மன், சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகாலட்சுமி, கருமாரி, சரஸ்வதி, கம்பாநதி, கர்ப்பிணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 9ம் நாள் விழா திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் நகர மன்ற தலைவரும் கோயில் தர்மகத்தாவுமான பூவை எம்.ஞானம் மற்றும் கழக மருத்துவர் அணி நிர்வாகி ஞா.பிரேம்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பூவை எம். ஞானம், நிர்மலா ஞானம், முன்னால் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில்  கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான பா. பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது.

பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான இரா. மணிமாறன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி, மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமத், பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மணி, நகர அவை தலைவர் தேவேந்திரன், நகர பொருளாளர் நடராஜன், நகர இனை செயலாளர் ராஜேஸ்வரி, நகர துணை செயலாளர் ரோசி டீச்சர், மாவட்ட பிரதிநிதி மோகன், மாவட்ட பிரதிநிதி லட்சுமி உமாபதி, கழக நிர்வாகிகள் நாராயணன், பரத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் வடசென்னை மாவட்ட கழக செயலாளருமான ஜெயக்குமார், கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பா. வளர்மதி, கழக மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பிவி ரமணா,திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன்,  காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லாப்பாக்கம் ராஜேந்திரன், கழக சிறுபான்மை பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான அப்துல் ரஹீம், கழக அமைப்பு செயலாளர்  திருவேற்காடு சீனிவாசன், கழக எம்ஜிஆர் மன்ற தலைவர்  சின்னையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தி.பா. கண்ணன், மாவட்ட துணை செயலாளர் காசு ஜனார்த்தனன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருநாவுக்கரசு, பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகநாதன், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஜி.டி.கௌதமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வைத்தியநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அந்தமான் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சார்லஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோபிநாத், மாநில மாணவரணி துணை செயலாளர் சல்மான் ஜாவித், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அபிஷேக் ஜேக்கப், திருமழிசை பேரூர் கழக செயலாளர் ரமேஷ், பூந்தமல்லி நகர வார்டு கழகச் செயலாளர்கள் கலைத்தென்றல், வெற்றி திருமகன், தமிழ்ச்செல்வம், நாகலிங்கம், குணசேகரன், நிசார் அஹமத், விக்னேஷ் பாபு, முகுந்தன், தினேஷ், தினகரன், மகேஷ், கதிர்வேல், சீனிவாசன், ஆனந்த், அப்துல்லாவிஜயன், மோகன்ராஜ், ஜான், பஷீர் அகமத், முகமது அலி, அக்பர், ராஜேஷ், மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் பூந்தமல்லி நகர கழக நிர்வாகிகள் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பிர அணி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இந்தவிழாவில் பக்தி பாடல்கள்,ஆடல் பாடல், இன்னிசை கச்சேரி, மேளதாளம், நாதஸ்வரம், பறை இசை, சென்டை மேளம், இசைக்கச்சேரி, கரகாட்டம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த திருவிழாவை காண பூந்தமல்லி,  குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர், ஐயப்பன்தாங்கல், வேலப்பன்சாவடி, திருவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.  விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் ஐயாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுனர்.

செய்தியாளர் வினோத்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...