TB சானிடோரியம் மருத்துவ மனையிலுள்ள, காலிபணி இடங்களை நிரப்ப வலியுறுத்தி, மருத்துவமனை பாதுகாப்பு குழு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.!
TB சானிடோரியம் மருத்துவமனையை அரசே ஏற்று நடத்த வேண்டும். முழு நேர காசநோய் மருத்துவரை நியமித்து, நோயாளிகளை, உள் நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகம், ஊழியர் குடியிருப்பு பகுதி கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பித்து, மரங்களை பாதுகாத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கிப்பட்டி பகுதி, மருத்துவமனை பாதுகாப்பு குழு சார்பில் , ஏன் வேண்டும்? என்பதனை முன்வைத்து காசநோய் மருத்துவமனை கோரிக்கை ஆர்ப்பாட்டம், தஞ்சை பனகல் கட்டிடம் எதிரில் நேற்றைய தினம் (5.7.2024) அன்று மாலை 5:30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பொதுவுடமை இயக்க பூதலூர் ஒன்றிய செயலாளர்,ச. செந்தமிழன் தலைமை தாங்கினார், திருவையாறு ஒன்றிய செயலாளர் நடுவை,கெ. தமிழரசு, தமிழர் நல பேரியக்க பூதலூர் ஒன்றிய செயலாளர்,பெ.மகேந்திரன், தமிழ்நாடு பொதுவுடமை இயக்க, வழக்கறிஞர், திருத்துறைப்பூண்டி தனஞ்செயன்,தமிழ்நாடு பொதுவுடமை இயக்க,வல்லம் நகர, மு.செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழ்நாடு பொதுவுடமை இயக்க மாவட்ட செயற்குழு, அண்ணா வைத்தியநாதசாமி, தமிழர் நல பேரியக்க பொதுச் செயலாளர், கவிஞர்,ஜே. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு பொதுவுடமை இயக்க பொதுச் செயலாளர், ஆ. தேவதாசு .ஆகியோர்கள் விளக்க உரையாற்றினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment