செங்குன்றம் ஆயிஷா மெட்ரிக் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் 122ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பள்ளியின் முதல்வர் வி.கௌரி தலைமையில் நடைபெற்றது. முனைவர் மௌலவி ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி முன்னிலை வகித்தார்.செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி தலைவர் ஜெ.பால்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருள்களை வழங்கினார். மாணவ-மாணவிகள் காமராஜரின் புகழையும் அவர் நாட்டுக்காக செய்த சாதனைகளை கூறி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில்ல் மஸ்ஜிதே ஆயிஷா தலைவர் டி.காஜா மொய்தீன், செயலாளர் எம்.அப்துல் லத்தீப், பொருளாளர் எஸ்.எல். முகம்மது ஆஷிக் அலி, துணைத்தலைவர் ஹாபிழ் டி.அக்பர் பாஷா, துணைச் செயலாளர் எம்.நாகூர் அனிபா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஜாகீர் உசேன், இ.சேட்டு, என்.அப்துல் வாஹித், ஏ.ஷாநவாஸ், எம்.சாகுல் அமீது, ஏ.கலீல் ரஹ்மான் மற்றும் மௌலவி அபுல் ஹசன் பிலாலி, வழக்கறிஞர் முகம்மது யாசீன் உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment