இலட்சி வாக்கம் கிராமத்தில் பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா.!
திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அருகில் உள்ள இலட்சி வாக்கம் கிராமத்தில் கல்வி வளர்ச்சி குழு சார்பில் பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு அரசு பொதுதேர்வில் தேர்ச்சி பொற்ற 19 மாணவ மாணவிகளை ஊக்கவிக்கும் வகையில் பாராட்டும் மற்றும் ஊக்கபரிசும் கேடயமும் வழங்கி வாழ்த்தி சிறப்பித்தனர்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் அனுபவங்கள பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழசெய்தது .இந்நிகழ்சியினை திருவள்ளூர் மாவட்ட திமுக கலைஇலக்கிய பகுதரிவு பேரவை அமைப்பாளர் V.P.ரவி மற்றும் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் K.V. லோகேஷ் மற்றும் கிராம முக்கிய பொதுமக்கள் ஒருங்கிணைத்து இருந்தனர் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் துரைபன்னீர் செல்வம்

Comments
Post a Comment