மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!
கழகப்பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கவும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான, இரா.காமராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்தமுயற்சிக்கும், திமுக அரசை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தஞ்சை மத்திய மாவட்ட கழகம் சார்பில், தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரில், 23/7/2024 அன்று காலை 10:30- மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமாகிய,மா.சேகர் தலைமை தாங்கினார். தஞ்சை மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன், மாவட்டக் கழக அவைத்தலைவர், என். நாகராஜன், மாவட்ட கழக இணை செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட கழக துணை செயலாளர்,எம். மாசிலாமணி, மாவட்டக் கழக துணை செயலாளர் வெண்ணிலா பாலை ரவி, கரந்தை,த. பஞ்சாபிகேஷன், கோட்டை பகுதி செயலாளர்,வி. புண்ணியமூர்த்தி, மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர்,டி. மனோகர், கீழவாசல் கழக பகுதிச் செயலாளர்,எஸ். சதீஷ்குமார், தஞ்சாவூர் மத்திய ஒன்றியக் கழக செயலாளர்,எ. ஸ்டாலின் செல்வராஜ் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், கோவி. தனபால்,ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்,சு. ஆசைத்தம்பி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர்,வி. தங்கத்துரை, திருவோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்,ச. வினோத், ஒரத்தநாடு பேரூர் கழக செயலாளர்,சு. இராதாகிருஷ்ணன், வல்லம் பேரூர் கழக செயலாளர்,என். சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, குடந்தை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல செயலாளர்,ஆர். திருநீலகண்டன், முன்னாள் பகுதி கழக செயலாளர்,வி. அறிவுடைநம்பி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் கே. நடராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் ஆகிய,மா.பா. பாண்டியராஜன், கழக அமைப்பு செயலாளர், ஆர். காந்தி,கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை.திருஞானம், கழக விவசாய பிரிவு இணைச்செயலாளர், கு. ராஜமாணிக்கம், கழக விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், கழக மருத்துவ பிரிவு துணைச்செயலாளர் துரை.கோ. கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர், டாக்டர். ஆர். சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்,கே. கதிரவன், மாவட்ட மாணவரணி செயலாளர் நாராயணி ஜவஹர் சக்திவேல், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர், என். கனகராஜ்,மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர்,எ.என். உமாபதி, ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரிவு நிர்வாகிகள், மகளிர் அணி, பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, வட்டக் கழகம், கிளைக் கழகம், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,கழக அனைத்து நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா
.jpeg)
Comments
Post a Comment