தஞ்சாவூர் செம்மொழி லயன்ஸ் சங்க, மூன்றாம் ஆண்டு, 2024-25-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா, தஞ்சை பெசன்ட் அரங்கில்,26.7.2024 அன்று மாலை,6:00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் செம்மொழி லயன்ஸ் சங்க தலைவர்,எஸ். சவுரிராஜ் தலைமை தாங்கினார், எம்.ஜே. எப்.கே. பிரேம் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார். புதியதலைவர்,எஸ். முக்த்தார் அஷ்ரப்அவர்களின் தலைமையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்று கொண்டனர்.
புதிய தலைவர் எஸ். முக்த்தார் அஷ்ரப், செயலாளர், எஸ். விமால வினோலியா, பொருளாளர்,எஸ். தக்ஷிணாமூர்த்தியும் பணியேற்றுக் கொண்டனர். இதில் எ.ஓ.டாக்டர். டி.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் மண்டல ஒருங் கிணைப்பாளர்கள்:ஆர்.ரவீந்திரன்,எம். செபாஷ் ரோலி,டி. ராஜ்குமார்,எஸ். பாஸ்கர், ஆரூர் அறிவு, ஜிகே. ஸ்ரீநாத், எம். செல்வமணி, எஸ்.வி.எஸ். சரவணன்,பி.ரஞ்சித், ஆர். சின்னத்துரை, எம். நூரூல் அமீன், ஆர். முருகானந்தம், ஜே. ரூபன்,ஜே.கே. ஆறுமுகம், ஸ்ரீநிவாசன்,எம். ஜெஸிந்தா நிர்மலா ராணி, டோரத்தி மேரி வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் முன்னாள், இந்நாள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள், மற்றும் நண்பர்கள் திரளாக பங்குக் கொண்டு சிறப்பித்தனர். பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment