தஞ்சாவூரில் நான்கரை வயது சிறுவனின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனைக் குழு.!
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் எலும்பியல்சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை வல்லுநருமான, டாக்டர். கே. பார்த்திபன் அத்துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர்,எஸ். சண்முக ஹரிஹரன் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை செயல்முறைகளினால் காயமடைந்த சிறுவனின் காலில் இயக்க செயற்பாடும் மற்றும் இயல்பான தோற்றமும், மீண்டும் மீட்க பட்டு இருக்கின்றன. இவ்விபத்திற்கு முன்பு இருந்தவாறு இயல்பாக நடக்கவும், ஓடவும், இந்த வெற்றிகரசிகிச்சை வழிவகுத்திருக்கிறது. கீழ்ப்புற காலில் கடுமையான எலும்பு முறிவு மற்றும் துண்டிக்கப்பட்ட இரத்த நாளத்தின் காரணமாக,முதலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த, ஒருதனியார் மருத்துவமனையில் முழுகாலையும் வெட்டி அகற்றுவது அவசியம் என்று இச்சிறுவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும், மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போது, காயம் அடைந்த காலில் இறந்த திசுக்கள் முற்றிலும் உடனடியாக அகற்றப்பட்டு, காயத்திற்கு தையல் போடப்பட்டது.
அத்துடன் இரத்த ஓட்டத்திற்கு பாதிப்பின்றி வெளிப்புறத்தை பொருத்தும் செயல்பாடும் மேற்கொள்ளப்பட்டு, தொற்று வராமல் தடுக்கப்பட்டது. ஆறு வாரங்களுக்கு பிறகு காலுக்கு வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்ததை அகற்றுவதற்காகவும், மற்றும் காலுக்கு உட்புறத்தில் ஒரு கம்பியை இணைப்பதற்காகவும், மற்றொரு அறுவை சிகிச்சை இச்சிறுவனுக்கு செய்யப்பட்டது. இந்த இருக்கட்ட அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு இச்சிறுவனுக்கு இயல்பான நடமாட்டத்திறன் முழு அளவில் திரும்ப கிடைத்திருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், பிள்ளையார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த நான்கரை ஆண்டுகள் வயதுள்ள ஒரு சிறுவனானரக்ஷனின் இடது காலில் டிராக்டர் ஏறி இறங்கிய ஒரு வினோதமான விபத்தால்எலும்பு முறிவும், காயமும் ஏற்பட்டன. கீழ்புற காலின் முக்கிய எலும்பு இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது. அத்துடன், கீழ்புற காலில் உள்ள இரண்டு முக்கியமான இரத்த நாளங்களில் ஒன்று கிழிந்து துண்டாகி விட்டது, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இச்சிறுவனை அழைத்து சென்ற போது, காலை வெட்டி எடுப்பதுதான் சாத்தியமுள்ள ஒரே விருப்பத்தேர்வு என்ற அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்காத அச்சிறுவனின் பெற்றோர்கள் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்து, சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். காயமடைந்த பகுதியில் இறந்த திசுக்கள், தோல் மற்றும் மாசுகளை அகற்றும் செயல்முறையை நாங்கள் உடனடியாக செய்தோம். மென் திசுக்களுக்கு பாதிப்பின்றி, திறந்த நிலையில இருந்து காயங்களுக்கு தையலிட்டு உடைந்த எலும்புகள் உரிய நிலையில் இருக்குமாறு செய்ய ஒரு வெளியார்ந்த பொருத்தியையும் காலுடன் இணைத்தோம். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையானது மிக நுட்பமாகவும், திறம்படவும் செய்யப்பட்டது.
கீழ்ப்புற காலுக்கு இரத்த ஓட்டம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு இந்த செயல்முறை நிகழ்த்தப்பட்டது. மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கால் பகுதியில் எந்தத் தொற்றும் ஏற்படாதவாறு தடுக்கப்பட்டது, என்று இந்த அறுவை சிகிச்சை மேற்கண்ட டாக்டர். பார்த்திபன் கூறினார். இச்சிறுவனுக்கு செய்யப்பட்ட இரண்டாவது சிகிச்சை குறித்து விளக்கம் அளித்த டாக்டர். ஹரிஹரன் காலில் உள்ள காயம் ஆறுவதற்காக ஆறு வாரங்கள் கடந்த பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக இச்சிறுவன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சிகிச்சையின் போது காலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கம்பியை நாங்கள் அகற்றியதோடு, டைட்டானியம் எலாஸ்டிக் நெயில் என்ற கம்பியை காலுக்கு உட்புறத்தில் நாங்கள் பொருத்தினோம், இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதிலிருந்து சில நாட்களுக்குள் அக்காலில் எறும்புகள் முற்றிலுமாக குணமடைந்தன. இதன் காரணமாக மற்ற சிறார்களை போலவே இப்பொழுது இச்சிறுவனால் இயல்பாக நடக்கவும், மற்றும் ஓடவும் சாத்தியமாகி இருக்கிறது. இப்போது சில நாட்களுக்கு முன்பு இந்த எலாஸ்டிக் நெய்ல் -ஐயும் நாங்கள் அகற்றி விட்டோம் என்று கூறினார். வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளினால் இந்த சிறுவனின் காலில் இயல்பான நடமாட்டத்தினை மீண்டும் வழங்கிய இந்த வெற்றிகரமான சாதனை குறித்து விளக்கமளிக்க நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பிரவீன். முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். கார்த்திகேயன் மகாராஜன் மற்றும் எலும்பியல் சிகிச்சை துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர். பாலகுருநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment