சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் பாஜக சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மண்டல் தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமையில் கர்மவீரர் கல்வித்தந்தை காமராஜர் 122வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் செங்குன்றத்தில் நடைபெற்றது.பாஜக ஓபிசி அணியின் மாநிலச் செயலாளரும் கே.ஆர்.வி. கல்வி அறக்கட்டளையின் தலைவருமான கே.ஆர். வெங்கடேசன், மாநில குழு உறுப்பினர் ஜெயச்சந்திரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு செங்குன்றம் ஆர்ஆர்எஸ். ஏகாம்பர செட்டியார் ஆரம்பப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட்டுபுத்தகம், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர்.
பள்ளி தலைமையாசிரியர்கள் அஞ்சுகம், க.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மண்டல் பொதுச் செயலாளர் கே.டி. சீனிவாசன், பொருளாளர் ரவி, முரளி செட்டியார், அரிகிருஷ்ணன், சம்பத், நாகராஜ், தனசெழியன், ஏழுமலை, ராஜ், கிருஷ்ணகுமார், ஹரி, வாசுகி, மாலா, இந்துமதி, பேபி, மீனு வைஷ்னு, ஷாயினா உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment