காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ரெட்ஹில்ஸ் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்.!
ரெட்ஹில்ஸ் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் 122வது பிறந்தநாளை முன்னிட்டு செங்குன்றம் பஜார் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து காமராஜர் சிலை, செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே உள்ளிட்ட இடங்களில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் ஏ.சிற்றம்பல நாடார் தலைமையில் நடைபெற்றது.ஆலோசகர் ஆர்.குணபாண்டியன் நாடார், செயலாளர் ஆர்.சீனிவாசன் நாடார், பொருளாளர் ஜி.பழனிச்சாமி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன், உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் சங்கத் துணைத்தலைவர்கள் ஆர்.செல்வக்குமார் நாடார், எம்.பொன்னையன் நாடார், டி.செல்வம் நாடார், துணைச் செயலாளர்கள் டி.பாலகிருஷ்ணன் நாடார், ஆர்.ஜனகபாண்டி நாடார், எல்.எஸ். தேவகுமார் நாடார், செயற்குழு உறுப்பினர்கள் ஹேமில்டன் வெல்சன், ஆர்டிஎஸ். கண்ணன், சி.ஸ்ரீகுமார், பி.எம். சண்முகராஜ், என்.லிங்கேஸ்வரன், கே.லிங்கேஸ்வரன், டி.கணேஷ் பாலாஜி, ஆர்.ஆர். சேகர், ஏ.கேசவன், எஸ்.செந்தில்குமார், ஜெ. மணிராஜ், கே.செல்வன், ஏ.முருகன், ஏ.சங்கர், வி.ரத்தினகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment