பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தாளாளர் மலையம் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுவது போல் இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டிகளை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டும் இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 90 மாணவ, மாணவிகளுக்கு விலை உயர்ந்த சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். குறிப்பாக இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் புதிதாக பள்ளியில் 6 ம் வகுப்பு சேரும் மாணவர்கள் அந்த ஆண்டு கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தியபன் அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களை அவர்களது பெற்றோர் புன்னகையுடன் எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி ஒன்றிய திமுக செயலாளர் கமலேஷ், மாவட்ட கவுன்சிலர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியை சுமதி வாசு, ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment