Skip to main content

காலை உணவுத் திட்டம் என்பது திமுக அரசின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்க வேண்டும்.! - கனிமொழி கருணாநிதி பெருமிதம்

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (15/07/2024) தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள வி.வி.டி நினைவு தொடக்கப் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். பின்னர்,மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தபடியே அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் திருஉருவப்படத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் பேசிய கனிமொழி எம்:பி: கலைஞர் கருணாநிதி அவர்கள் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக சட்டத்தை இயற்றி, எந்த நாளை அறிவித்தாரோ. அதேநாளில் நம்முடைய முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் விரிவாக்கி இருக்கிறார்.முதலமைச்சர் பேசும்போது நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அந்த மகிழ்ச்சிக்கு வாய்ப்பு அளித்த மக்களை அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார். இந்த காலை உணவுத் திட்டம் என்பது உண்மையாகவே, திமுக அரசின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்க வேண்டும்.

நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில், காலை உணவுத் திட்டத்தின் வழியாக 46 ஆயிரத்து 18 மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள். காலை உணவு என்பது பிள்ளைகளுக்கு மிக முக்கியமான, பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடிய பருவத்தில் மிக முக்கியமான ஒன்று. காலையில் சாப்பிடாமல் பள்ளியில் வரக்கூடிய பிள்ளைகள் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாது. மாணவர்கள் மிகவும் சோர்வோடு அங்கே அமர்ந்திருப்பார்கள், அவர்களுக்கு  சோர்வின் காரணமாகப் பாடத்தைக் கவனிக்காமல் ஆசிரியருக்கும் அது ஒரு சவாலாக மாறி, இருவருக்கும் இடையே போராட்டமாக மாறக்கூடிய நிகழ்வு கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.இந்தியாவில் UNICEF கணக்கெடுப்பை எடுத்துக் கொண்டால், மிகக் குறைவாக வளர்ச்சி இருக்கக் கூடிய குழந்தைகள் உணவு கிடைக்காத காரணத்தால் 38 சதவீதம் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். மேலும், இந்திய அரசு கணக்கெடுப்பு ஆய்வுகளின்படி கூட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் உணவு பற்றாக்குறை, உணவு கிடைக்காமல் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் உயிரிழந்து கொண்டியிருக்கிறார்கள் என்ற வருத்தமான செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நம்முடைய பிள்ளைகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம்முடைய முதலமைச்சர் எதிர்கால தலைமுறை ஆரோக்கியமானதாக, மகிழ்ச்சியோடு கல்வி பயிலக்கூடிய ஒரு தலைமுறையாக உருவாக வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திட்டம்.  இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்த முதலமைச்சருக்கு என்னுடைய நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று  பேசினார்.தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ரா.சரவண குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தின் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1,14,000 மாணவர்கள் பயன்பெற்றனர். இந்தநிலையில், 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 அரசு பள்ளிகளில் படிக்கும் 18,50,000 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இதனை தொடர்ந்து அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.


செய்தியாளர் ஆ. ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...