சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரனோடை, ஆத்தூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், ஞாயிறு, சோத்து பெரும்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம் காரனோடை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை ஏற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே. கருணாகரன் முன்னிலை வகித்தார். சோழவரம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்கள்.முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எரிசக்தி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 21 துறைகள் மூலம் பொது மக்களுக்கு தேவையான கோரிக்கை மனுக்கள் பெற்று கணினியில் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.இம்முகாமில் வட்டாட்சியர் மதிவாணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் காரனோடை சுலக்ஷனா ராமச்சந்திரன், ஆத்தூர் ஏ.சற்குணம் பழைய எருமை எட்டிப்பாளையம் வெங்கட்ராமன், புதிய எருமை வெட்டி பாளையம் ஸ்ரீதர், ஞாயிறு ஜி.பி. எல்லையன், நெற்குன்றம் பாபு, சோத்து பெரும்பேடு தனலட்சுமி சீனிவாசன், வட்டார வளர்ச்சி துணை அலுவலர் யோகிதாஸ் வருவாய் அலுவலர்கள் பெருமாள், முனுசாமி, கிராமம் நிர்வாக அலுவலர்கள் பிரபு, நரேஷ் குமார், மோகன அபிராமி, சீனிவாசன், ரமேஷ் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment