மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கு கூடுதல் நிதி வழங்காததை கண்டித்தும்,100-நாள் வேலைக்கு கூடுதல் நிதி வழங்க கோரியும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சை பனகல் கட்டிடம் எதிரில், 26.7.2024 அன்று காலை 10:30- மணியளவில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச. தஞ்சை ஒன்றிய செயலாளர், டி. சண்முகவேலு தலைமை தாங்கினார்.வி.தொ.ச. மாவட்ட செயலாளர் ஆர்.வாசு துவக்கி வைத்தார். இதில் தஞ்சை ஒன்றிய செயலாளர்,கே. அபிமன்னன், மாவட்ட செயலாளர்,பி.எம். இளங்கோவன்,தவிச, ஒன்றிய செய.லாளர் எஸ்.கோவிந்தராஜ், விதொச,ஒன்றிய தலைவர்,கே. கண்ணன், பெண்விவசாய தொழிலாளர் அமைப்பு மாவட்ட கன்வீனர்,சி.சரிதா, ஒன்றிய தலைவர்,கே. சௌந்தரராஜன்,P. முத்துசாமி ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment