தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க,2024-25-ஆம் ஆண்டிற்கான, புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா, தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை, ஈஸ்வரி நகர் அருகே உள்ள, ௹பிஹாலில், 24.7.2024 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியானது தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்கதலைவர், சில்வஸ்டர் எட்வின் பிரபு தலைமையில் நடைபெற்றது, முன்னாள் மாவட்ட ஆளுநர்,கே.சேது சுப்ரமணியன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி, அவர்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்.2024-25 ஆம் ஆண்டிற்கான, புதியபொறுப்பாளர்கள்,எ.உதயகுமார் தலைமையில் பணியேற்கப்பட்டனர்.
புதிய தலைவர்,எ. உதயகுமார்,செயலாளர்,கே. கண்ணன், பொருளாளர்,ஜி. கண்ணன், முதல் துணைத்தலைவர், ஜி.நந்தகோபாலன், இரண்டாம் துணைத் தலைவர்,எஸ். மாரிமுத்து, இணைச்செயலாளர் யூ. சுதர்சன், இணைபொருளாளர், எ.ஜான்சன் பீட்டர், ஒருங்கிணைப்பாளர், பி.பாலசுப்ரமணியன், துணை ஒருங்கிணைப்பாளர், எஸ்.தமிழ்ச்செல்வன், உறுப்பினர் வளர்ச்சி தலைவர்,எ. பாபிலோன்சுந்தர், உறுப்பினர் வளர்ச்சி துணைத்தலைவர், எஸ்.மார்ட்டின் அந்தோணிசாமி, தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர், எம்.சுகந்தவள்ளி, சேவைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சுந்தரவள்ளி, சேவை திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கே. தினேஷ்க்குமார், ஒருங்கிணைப்பாளர், எ.ஜான்சன், தகவல் தொடர்பு அலுவலர், எஸ். லலிதா, தகவல் தொடர்பு துணை அலுவலர்,எஸ். மணிபாரதி, முடுக்குனர்,என். தீனதயாளன், அடக்குனர்,கே. அப்துல் மஜீத். இயக்குனர்கள்:எஸ். குருநாதன்,எஸ். ஜான்சன் சேவியர்,வி. பிரகதீஸ்வரன்,யூ. அனுசியா,டி. மெடிசியா,கே. அபிராமி உள்ளிட்டோர்கள் பணியேற்று கொண்டனர்.
டாக்டர்.டி.ஸ்டாலின் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார். அப்போது அவர் உரையில் பேசியது: சங்கத்தின் கோட்பாடுகளையும், சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும், ஒவ்வொருவரும் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும், இச்சங்கம் எல்லா சங்கங்களை காட்டிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாக திகழ வேண்டும் என இவ்வாறு கூறினார். ஆர்.வேதமூர்த்தி சேவை திட்டங்களை தொடங்கி வைத்து, இரண்டு நபர்களுக்கு இரண்டு பை அரிசி மூட்டையும், மூன்று நபர்களுக்கு உயிரைக் காக்கும் தலைகவசத்தையும்வழங்கினார். இந்த நிகழ்வில்,டி. சிவராமகிருஷ்ணன், வேலு.துரைசாமி குருநாதன்,டி.என். குணா,பி. கருணாகரன்,பி. சதீஷ்குமார்,டி. ஆனந்த்,டாக்டர்.எம். அய்யாராஜு அனந்தம்மன்,எம். புண்ணியமூர்த்தி, டாக்டர்.எஸ்.ஆர்.ஜலபதி,என்.எ. தமிழ்ச்செல்வன், ஜெயகுமார், சில்வர் ஸ்டார் எட்வின் பிரபு, திரவியம், முத்துக்குமார், எம். சுரேஷ், தன்ராஜ், கே.எஸ். சக்கரவர்த்தி, புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினர். சிகரம் லயன் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக:டி. சசிகுமார்,ஆர். மதியழகன்,டி. சரவணன்,எஸ்.பி. விஸ்வநாதன், ஆர். பிரபு, ஆர். பிரகாஷ், சதீஷ்,எஸ். லலிதா, எம். சுகந்தவள்ளி தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment