மத்திய-மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டவர்க்கே வழங்க வேண்டும்.! சிபிஐஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சையில் பரப்புரை
நாடு விடுதலை பெற்ற பிறகு மத்தியில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே பறித்துக் கொண்டது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு நீட் தேர்வால் பறிபோனது. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு இன்றளவும் தீர்வு ஏற்படாதது, ஜிஎஸ்டி வரி கொள்கையில் மாநிலங்களின் வருவாய் பறிபோனது, மாநில பட்டியலில் உள்ள கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்று அந்தெந்த மாநில அரசுகளே கல்வி கொள்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பறித்துக் கொண்டது உள்ளிட்டு அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஒன்றிய பிஜேபி அரசின் ஆட்சியில் கடந்த,10- ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்களின் பணிகள் மற்றும் பொதுத்துறைகளின் பணிகளில் குறிப்பாக ரயில்வே, வங்கி, நிலக்கரி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது, தமிழ்நாட்டு இளைஞர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலைமையிலே உள்ளனர். இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் அந்த மாநிலங்களின் இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றியது போன்று, தமிழ்நாடு அரசும் மத்திய,மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்ற படவேண்டும்.
கடந்த 2016-ல் அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில்,வெளி மாநிலத்தவர்களும் தேர்வு எழுதி மாநில அரசின் பணிகளில் சேரலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. 2021-தேர்தல் காலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் வேலைக்கு சேரலாம் என்ற சட்டத்தை திரும்ப பெறுவோம் என, திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தமிழ்நாட்டின் அரசு பணிகளில் வெளி மாநிலத்தவர்கள்,மாநில மொழியான தமிழ் மொழியில் படித்து தேர்ச்சி பெற்று பணிகளில் சேரலாம் என்று திமுக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேதனை அளித்துள்ளது. அதிமுக,திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த இரண்டு சட்டங்களையும் தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் வெற்றி பெற்ற, 40- நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் நாட்டரசின் மத்திய, மாநில அரசு பணிகள், பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற அதிகாரத்தை நாடாளுமன்றத்தில் வாதாடி பெற வேண்டும் என, வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மக்கள் விடுதலை சார்பில் மாநிலந் தழுவிய பரப்புரை இயக்கம் இன்று 23.07.2024 செவ்வாய்க்கிழமை காலை 10- மணிக்கு தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது.
பரப்புரை இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி மா-லெ மக்கள் விடுதலை மாநில துணைத்தலைவர் இரா.அருணாச்சலம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ் மாநில பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குமரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் இராமர், திருச்சி மாவட்ட செயலாளர் கவிஞர் பாட்டாளி, தஞ்சை மாவட்ட செயலாளர் சா.செந்தில்குமார், நிர்வாகிகள் வி. பாஸ்கர், ராதாகிருஷ்ணன், பாண்டியன், ப.ஜோதிவேல், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், சமூக ஆர்வலர்கள் ஏகலைவன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment