Skip to main content

கேளம்பாக்கம் திருவள்ளூவர் கல்வி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.!

 செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் நேற்று கல்வி கண்திறந்த காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் திருவள்ளூவர் கல்வி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் என்னும் தலைப்பில் கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு  மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக வாகனங்களில் எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியானது வண்டலூர்  செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கேளியம்மன் கோவில் எதிரே அமைந்துள்ள அன்னை சமுதாய நலக்கூடத்திலிருந்து துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு  கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் எக்ஸ்பிரஸ் எஸ்.எல்லப்பன் தலைமை தாங்கினார். கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் திருவள்ளூவர் கல்வி மன்றத்தின் நிறுவன இயக்குனர் கா.கோ.பழனி முன்னிலை வகித்தார் . ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ராணிஎல்லப்பன் கலந்துகொண்டு கல்வி சீர்வரிசை கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவங்கிவைத்து பொதுமக்கள் கல்வியாளர்கள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் ஊர்வலமாக நடந்துச்சென்றார். இந்தஊர்வலமானது வண்டலூர் சாலையிலிருந்து ஓஎம்ஆர்வழியாக திரும்பி கோவளம் செல்லும் சாலை அருகே அமைந்துள்ள அரசினர்கள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றடைந்தது அங்கு தலைவர் ராணிஎல்லப்பன்  முதலவதாக கல்விசீர்வரிசையாக 04பீரோ , 1000லிட்டர்சுத்திகரிப்பு செய்யக்கூடிய ஆர்ஓபிளாண்ட் , 15நாற்காலி , 40டியூப்லைட் , 01பெரியஸ்பீக்கர் ஆகியவற்றுடன் திருவள்ளூவர் சிலையை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அருகில் பெண்கள் அரசினர் மேல்பள்ளக்கு  ஊர்வலமாக சென்று சாத்தாங்குப்பம் குடியிருப்போர் நலச்சங்கத்தலைவர் எக்ஸ்பிரஸ்.எஸ்.எல்லப்பன் அங்கிருந்த தலைமையாசிரியையிடம் கல்வி சீர்வரிசையாக ஸ்டீல் பீரோ 02 ,மரபீரோ 02  , டியூப்லைட் 40 , சீலிங்பேன் 10 ஆர்ஓபிளாண்ட் 01 , சின்டெக்ஸ்டேங்க் 02 ,01பெரியஸ்பீக்கர் , மரபெஞ்ச் 02 ஆகியவற்றை வழங்கி வாழ்த்துதெரிவித்தார்.

இறுதியாக ஓஎம்ஆர் சாலை அருகே இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் திருவள்ளூவர் கல்வி மன்றத்தின் நிறுவனத்தலைவர் கா.கோ.பழனி அவர்கள் சுமார் 350மாணவர்களுக்கு ஸ்டீல் டிபன்பாக்ஸ் ,வாட்டர் பாட்டில் இரண்டு நாற்காலி ஆகியவற்றை வழங்கிவாழ்த்து தெரிவித்தார். மூன்று பள்ளிகளிலும் சுமார் 11.80 இலட்சரூபாய் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கேளம்பாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர் உமர் , திமுக கட்சியைச்சேர்ந்த சுக்கூர் , முகம்து சுல்தான் உள்ளிட்டவர்களுடன் பொதுமக்கள் கல்வியாளர்கள் மனவளக்கலை மன்றத்தினர்கள் திரளாக கலந்துகொண்டனர்கள் . இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவள்ளூவர் கல்வி மன்றத்தின் நிறுவனத்தலைவர் கா.கோ.பழனி அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தார். செங்கல்பட்டு மாவட்டத்திலேயே  முதன்முதலவாக காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி மூன்று பள்ளிகளுக்கு பலஇலட்சம்மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரை அனைத்து தரப்பினர்களும் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்கள்.


செய்தியாளர் மூர்த்தி

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...