தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில், பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா, 13.07.2024 அன்று திருச்சி அருண் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சரவணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ராக்போட் டைம்ஸ் ஆசிரியர் எஸ்.ஆர்.லட்சுமி நாராயணன் அவர்கள் பத்திரிகையாளர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை, கல்வி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மாநில துணைத் தலைவர் புதிய சகாப்தம் ஆசிரியர் என்.அறிவழகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ஜன முரசு ஆசிரியர் எஸ்.முகமது கனி முன்னிலையில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் SST.அரசப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் அரசியல் அங்கதம் ஆசிரியர் த.நவீன்மணி, திருச்சி மாவட்ட செயலாளர் சையது முஸ்தபா, மாவட்ட பொருளாளர் எஸ்.முருகானந்தம் , மாநில ஒருங்கிணைப்பாளர் பேனா முள் ஆசிரியர் பா.கார்த்திக், அமைப்பு செயலாளர் சட்ட களஞ்சியம் ஆசிரியர் நெல்லை கலைமணி, அவைத் தலைவர் ஜி.ஶ்ரீதர், துணை செயலாளர் போலீஸ் பார்வை எம்.பாண்டியராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் மக்கள் மன்றம் ஆசிரியர் கவிஞர் S.T.P.சிவக்குமார், ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக அவதாரம் ஆசிரியர் அல்லூர் ஶ்ரீனிவாசன், லட்சியம் வெல்லும் ஆசிரியர் எஸ். சதாசிவம், மனித விடியல் ஆசிரியர் பி.மோகன், உள்ளும் புறமும் ஆசிரியர் கார்த்திகேயன், சுமைதாங்கி ஆசிரியர் எகியா, அரசியல் அரியணை ஆசிரியர் பொ.ஜெயபாலன், தகவல் டுடே ஆசிரியர் கே. ஆறுமுகம், இளைய தலைமுறை ஆசிரியர் மருது, செய்தி பின்னணி ஆசிரியர் அங்கு.பெ.ரெங்கையா, ஞானப்பழம் ஆசிரியர் லோகநாதன், அரசியல் ஆத்மா ஆசிரியர் பசுலூதீன், சென்னை தகவல் ஆசிரியர் சுலைமான், செய்தி நேரம் பிளட் ஷாம், தின ஓசை நாகராஜ், புதிய சகாப்தம் அருண், தின தென்றல் பாண்டியம்மாள், தளபதி அரசு ரஹீம், குளித்தலை மூத்த பத்திரிகையாளர் கணபதி அய்யர், சாமுராய் பாரி, அரசியல் ஒற்றன் சதிஷ், நாட்டு பற்றலான் தங்கமணி உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் மற்றும் குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment