டெல்டாபாசனத்திற்கு காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம்.!
காவிரி டெல்டாவில் சுமார்,15- லட்சம் ஏக்கரில் குருவை மற்றும் சம்பா சாகுபடிகள் நடந்து வந்துள்ளன.காவிரியில் சரியாக தண்ணீர் வராததாலும், பருவ மழைகள் அடிக்கடி பொய்த்துப் போவதாலும் குருவை,தாளடி, சம்பா சாகுபடிகள் தொடர்ச்சியாக பாதித்து வருகின்றன. இந்த நிலையில் காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு முடிவின்படி காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது .ஆனால் கர்நாடக அரசு தங்கள் அணைகளில் நீர் இருப்பு போதுமானதாக இல்லை என்ற பொய்யான காரணத்த்தைக்கூறி காவிரியில் தண்ணீர் விட மறுத்து விட்டது. காவிரியில் தண்ணீர் விடுவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் குடிநீர் தேவையை கருதியும், குருவை மற்றும் சம்பா சாகுபடிக்கான வேலைகளுக்காகவும் கர்நாடக அரசு ஏற்கனவே மாதம் தோறும் தரவேண்டிய சுமார் 41 டிஎம்சி தண்ணீரை தர வலியுறுத்தியும், காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு முடிவின்படியும் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும் ,ஒன்றிய பாஜக அரசு,கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை கண்டித்தும், நியாயமான முடிவுகளை கர்நாடக நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கங்கள் இன்று காலை 11-மணிக்கு தஞ்சாவூரில் வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி ரயிலை மறித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர் .
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12- பெண்கள் உள்ளிட்டு 76- பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்,சாமி. நடராஜன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, கே. உலகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர், ஆர்.இராமச்சந்திரன், தேசியக் குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர், என்.வி.கண்ணன், மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல், பொருளாளர் கோ.பாஸ்கர், ஒன்றிய குழு நிர்வாகிகள் குணசேகரன், ராமலிங்கம், ஐயாராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சரவணன், என் .குருசாமி , கரிகாலன், விவசாய சங்க தஞ்சை ஒன்றிய செயலாளர் ஞானமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பக்ரசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் கோவிந்தராஜன், பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார், தலைவர் கோவிந்தராஜ், வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், நிர்வாகிகள் தமிழ் முதல்வன் ,சிவா.தமிழ்நீதி, வீராசாமி , முருகானந்தம், வெற்றி மாதர் சங்கங்கள் சார்பில், மாவட்ட செயலாளர் கலைச்செல்வி, மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் வசந்தி, கண்ணகி,முத்துலட்சுமி, சீதையம்மாள், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர்t வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் ரயில் மறியலில் பங்கேற்று கைதாகினர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment