Skip to main content

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் நிறுத்தப் பட வேண்டும்! தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் வலியுறுத்தல்.

பாண்டிச்சேரி கவிஞர் ஜோசப் ராஜா அவர்கள் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடுமையான தாக்குதலை பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீதான படுகொலைகளையும் கண்டித்தும், பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியும் "காத்திருக்கும் சாவிகள்" கவிதை நூலை எழுதியுள்ளார்.இந்த நூலின் அறிமுக கூட்டம் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தஞ்சை நஞ்சை     கலக்குழுவின் சார்பில், நேற்றைய தினம்,14.7.24 மாலை 6:30 -மணியளவில் தஞ்சைபெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகர செயலாளர் சாம்பான் தலைமை வகித்தார். தஞ்சை, நஞ்சை, லாவணி கலைக்குழு நிர்வாகி ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். காத்திருக்கும் சாவிகள் நூலை அறிமுகம் செய்து  மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன், பொறியாளர் ஜோ.கென்னடி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாடகர் கோவன், முனைவர்கள் சத்தியமூர்த்தி, வெற்றிச்செல்வன் ஆகியோர் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்கள். நூல் அறிமுகத்தில் முதல் உலகப்போருக்கு பின்பு,யூதர்களுக்கு இருப்பிடமும்,நாடே இல்லாமல் இருந்த நிலையில், அன்றைக்கு ஏகாதிபத்தியத்திற்கு தலைமை வகித்த பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை யூதர்களுக்கு தாரை வார்த்தது. நமது நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் பாலஸ்தீனத்தில் தனிநாடு பிரித்துக் கொடுப்பதை கடுமையாக எதிர்த்தார். யூதர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அங்கு தான் அவர்கள் இருக்க வேண்டும் அதுதான் அவர்களுக்கு நாடு என்று அறிவுறுத்தினார்.  1920-ஆம் ஆண்டு முதல், படிப்படியாக யூதர்கள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில்  குடியேறி இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி  பலப்படுத்தினார்கள். சுமார் நூற்றாண்டு காலமாக உலகில் போர் நடக்கிறது என்றால் அது இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புக்காக கொடுத்த போராகும்.போர் முறைகளுக் கென்று கடந்த மன்னர் காலத்திலேயே ஒழுங்கு விதிமுறைகள் கடைபிடிக் கப்பட்டது. பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் என யாரும் துன்புறுத்தப் பட்டது இல்லை,  கொல்லப்பட்டதில்லை. 

சர்வதேச போர் விதிமுறைகள் குறித்து ஐநா மன்றமும் விதிமுறைகளை வரையறுத்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கான  போரில் இலங்கை சிங்கள இனவெறி அரசு சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறி ஈழத் தமிழர்களை கொன்று குவித்ததற்கு ஒப்பாக,தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான போர் நடந்து    கொண்டிரு க்கிறது. காசா நகரத்திலே சுமார் 50,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.அது பொய்யான தகவல் ஆகும். ஏறத்தாழ சுமார் ஒரு லட்சத்து, 80-ஆயிரம் பாலஸ்தீனர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், உள்ளிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அடி வருடியான இஸ்ரேலை தூண்டி வருகிறது. ஆயுதம் அளித்தும் வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா மக்கள் சிரியா, லெபனான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.

முதலாளித்துவம் என்பது சுரண்டும் கொள்கையை உடையது. சுரண்டலற்ற சமூகத்தை, அமைதியான சமூகத்தை நாம் படைக்க வேண்டும் என்றால், அது மார்க்சிய வழிகாட்டு தலின் அடிப்படையில் தான் உருவாக்க முடியும், முதலாளித்துவ சுரண்டலை ஒழிக்க சோசலிசம் தான் மாற்றாகும். பாலஸ்தீனமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜோசப்ராஜாவின் காத்திருக்கும் சாவிகள் கவிதை நூல் கலை இலக்கிய பண்பாட்டு தளத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு  ஆதரவாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பது சிறப்பிற்குரியதாகும் என்று குறிப்பிட்டு பேசினார்கள்.முடிவில் தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...